பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேசன், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், சமுக ஆர்வலர்கள் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கணேஷன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன் உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 150.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 20 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாமில் சேவை புரிந்தனர்.
முகாமில் கண் தொழில் நுட்புனர் கலாவதி ஸ்ரீதர், கூடலூர் நுகர்வோர் மைய துணை தலைவர் செல்வராஜ், மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி சந்திரன், மருத்துவமனை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்