லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

63 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது

 பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம்
மக்கள் மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து 63  வது  இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  தேசிய  கொடி ஏற்றப்பட்டது


நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம் தலைவர்   சிவசுப்ரமணியம்  தலைமை தங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை    மைய  அமைப்பாளர் நௌசாத்  செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். 


வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கொடி ஏற்றி வைத்தார் 


 கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர்  செல்வராஜ் வியாபாரிகள் சங்க நிர்வாகி செலவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .


நிகழ்ச்சியில்  நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை    மைய நிர்வாகிகள் செந்தாமரை   சுரேஷ்  ராம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 23 ஜனவரி, 2012

நேதாஜி பிறந்த நாள் விழா 23.12.2012

 பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது 

நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு .சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் முன்னிலை வகித்தார் 

நிகழ்ச்சியில் நேதாஜி செயல்பாடுகள் குறித்தும் அவரின் பெருமைகள் குறித்தும் நினைவு கூறப்பட்டது   

மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது  
நிகழ்ச்சியில் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் நீலமலை ராஜா காந்தி சேவை மைய செயலாளர் சந்திரன் மற்றும் ரவி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.