லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

சனி, 30 ஜனவரி, 2016

மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்






ஜனவரி   30   2016
பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் மகாத்மா காந்தியின்  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர்மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  அவரது கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.  தூய்மை இந்தியா, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட உறுதிமொழிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட சித்தா மருத்துவஅலுவலர் கணேசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், அபதாகீர், பிரபு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இந்திராஜித், தணிஸ்லாஸ், நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.