மகாத்மா காந்தி பொது சேவை மையம் அப்பல்லோ இரத்த பரிசோதனை நிலையம் கோவை ஆகியன இணைந்து பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் இரத்த பரிசோதனை முகாமினை நடத்தின
இம்முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, HP அளவு, கொழுப்பு அளவு உள்ளிட்ட இரத்த சம்பத்தமான பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டன.
முகாமிற்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். மைய தலைவர் நௌசாத், துணை செயலாளர்
சுரேஷ் , முன்னாள் தலைவர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்பலோ இரத்த பரிசோதனை நிலைய இயக்குனர் லயன் .அலாவுதீன், மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் , இரத்த பரிசோதகர்கள் சேகர், ரூபி சாலினி, ப்ரியா, பூபதி, கனகசுப்பிரமணியம் உள்ளிட்டோர் இரத்த பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.
மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் சலீம், ஓம் குமார், கபீர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.