லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

புதன், 29 ஜூலை, 2015

தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது அப்துல் கலாம்


சென்னை: 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்ட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்று தான் வாழ்ந்த போதே வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய மரணத்தினால் எந்த இழப்பும் ஏற்படக்கூடாது கூடுதலாக வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை இரவு உயிரிழந்தார். இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். நாடு முழுக்கவுள்ள பள்ளி, கல்லுரி மாணவ - மாணவிகளை சந்திப்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் வலுவான இளைய தலைமுறை நாட்டை வல்லசாக்கவுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார். பள்ளிகளில் இரங்கல் அப்துல் கலாமின் மறைவுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. சென்னையில் பிரபல பள்ளிகளில் அப்துல் கலாம் மறைவிற்கு பிரார்தனை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறுகின்றன.

திங்கள், 27 ஜூலை, 2015

'மக்கள் ஜனாதிபதி' பாரதரத்னா அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா அப்துல் கலாம் அவர்கள், தமிழகத்தை மையமாக வைத்து எழுதி வந்த புத்தகம், முடிக்கப்படாத நிலையில் அவர் மறைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று காலமானார். மேகாலயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்தார். 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 83 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர்.
தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார். ‘இந்தியா 2020’ என்பது உள்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார். 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். ‘கனவு காணுங்கள்’ என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி இளைஞர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினார். இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடனும், திட்டங்களுடனும் இந்தியா-2020 என்ற புத்தகத்தை அப்துல்கலாம் எழுதியிருந்தார்.  
இதேபோல் தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் திடங்களுடன் "எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்" என்ற புத்தகத்தை எழுதிவந்தார். தமிழில் அவர் எழுதிவந்த இந்த புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை சார்ந்து, "எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்" என்ற புத்தகம். 
கலாம் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோது அவரது அறிவியல் ஆலோசகராக இருந்தவரும், இந்த புத்தகத்தின் இணையாசிரியருமான வி.பொன்ராஜ் கலாமுடன் இதுவரை நடத்திய விரிவான விவாதங்களுக்கு பிறகு 7 அத்தியாயங்களை முடித்துள்ளார். இந்த புத்தகம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கூட பொன்ராஜுடன் கலாம் ஆலோசித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிகுறித்து பெரும் கனவுகளை வைத்திருந்த அப்துல்கலாம், புத்தகத்தை எழுதிமுடிக்கும் முன்பே மறைந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது. 

புதுடெல்லி, 
மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்த செய்தி அறிந்து, நாடே சோகத்தில் மூழ்கிஉள்ளது. டெல்லி கொண்டுவரப்படும் அவரது உடலை பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார்.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார்.
கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் இணைப்பு திட்டத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலாளர் பி.பி.ஓ.வார்ஜிரி, டி.ஜி.பி. ராஜீவ் மேத்தா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்திராகாந்தி ராணுவ மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் வர வழைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் மரணம் அடைந்தார். தேசத்தின் அனைத்து மக்களின் அன்பை முழுவதும் பெற்று, மக்களின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது.
அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து காலை அவரது உடல் விமானப்படை விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்படுகிறது. புதுடெல்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படும் அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்கிறார்.  

‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று காலமானார். மேகாலயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தால் அவர் மரணம் அடைந்தார்.
ஷில்லாங், 
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம்.

கல்வித் துறையில் ஈடுபாடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர்.
கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங் கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார்.
கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் இணைப்பு திட்டத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.


கல்லூரி விழாவில் மயங்கி விழுந்தார்
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலாளர் பி.பி.ஓ.வார்ஜிரி, டி.ஜி.பி. ராஜீவ் மேத்தா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

அப்துல் கலாம் மரணம்
அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்திராகாந்தி ராணுவ மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் வரவழைக்கப் பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் மரணம் அடைந்தார்.
இதுபற்றி பெதானி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜான் எல்.சைலோ ரிந்தாதியாங் கூறுகையில், “கிட்டத்தட்ட முற்றிலும் நினைவிழந்த நிலையிலேயே அப்துல் கலாம் கொண்டுவரப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் பலன் இல்லாமல் போய்விட்டது. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கக்கூடும் என்று கருதுகிறோம்” என்றார்.
அப்துல் கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி ராமேசுவரத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஏ.பி.ஜெய்னுலாவுதீன் மரைக்காயர்- அஸ்மா அம்மாள். 
பள்ளி, கல்லூரி படிப்பு தந்தை ஏ.பி.ஜெய்னுலாவுதீன் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாய்மரக்கப்பல் போக்குவரத்தை நடத்தியவர்.
அப்துல் கலாம் 5-ம் வகுப்பு வரை ராமேசுவரத்தில் உள்ள சாமியார் பள்ளிக்கூடத்தில் படித்தார். பின்பு ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அதன்பின்னர், சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் வான்பொறியியல் படித்தார். 1963-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஏவுகணை தளத்தில் பணி

20 ஆண்டுகள் கேரளாவில் உள்ள தும்பா வானவெளி ஆராய்ச்சி நிலையத்திலும், அடுத்த 20 ஆண்டுகள் ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள சண்டிபூர் ராக்கெட் ஏவுகணை தளத்திலும் பணியாற்றினார்.
இங்கிருந்து அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்திய பெருமையும் அப்துல் கலாமுக்கு உண்டு.
அப்போது முழுவதும் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தையும் உருவாக்கினார்.

1982-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 
ஜனாதிபதி ஆனார்

1998- ஆண்டு பொக்ரானில் இந்தியா தனது 2-வது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த அரிய சாதனைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் அப்துல் கலாம்.
1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார். இது கேபினட் மந்திரி அந்தஸ்துக்கு இணையான பதவி ஆகும். இதேபோல் அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்து உள்ளார்.
2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இந்த தேர்தலில் 90 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.
விருதுகளை குவித்தவர்

அப்துல் கலாம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றவர். டாக்டர் பைரன்ராய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பாஷின் விருது, 1996-ம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப்பதக்க விருது, அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான ‘மோடி’ விருது, விஞ்ஞான தொழில்நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
30 கவுரவ டாக்டர் பட்டங்கள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல் கலைக் கழகங்கள் அப்துல்கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன. இந்தியாவில் இத்தனை பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

அக்னிச் சிறகுகள்
தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார். ‘இந்தியா 2020’ என்பது உள்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். ‘கனவு காணுங்கள்’ என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி இளைஞர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினார்.
தனது அறிவியல் லட்சியத்துக்கு இடையூறாக அமையும் என்பதால் அப்துல்கலாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

செவ்வாய், 14 ஜூலை, 2015

பெருந்தலைவர் காம ராசரின் பிறந்த நாள் இன்று

தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் ரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காம ராசரின் பிறந்த நாள் இன்று  (ஜூலை 15). நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காம ராசர் பெயரால் கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
அதன் காரணம் என்னவென்று கேட்டபோது இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் அவர் முதலில் மேல்சாதிக்காரராக, குறிப்பாக பார்ப்பனராக இருக்க வேண்டும். ஒரு பாரம்பரியமிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் மேல்நாட்டுப் படிப்புப் படித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர் வடநாட்டுக்காரராக இருக்க வேண்டும். அதிலும் இந்திக்காரராக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர் சிவப்பு நிறத்தவராகப் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக  இருக்க வேண்டும். இந்த ஆறு அடையாளங்களில் ஒன்று கூட இல்லாமல் ஓர் அகில இந்தியத் தலைவராக வந்தார் என்றால் அது காமராசர் ஒருவர்தான் என்று பதில் சொன்னார்கள்.
கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர்தான் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை ஏகமானதாகத் தேர்வு செய்தவர். அவரது திறமையை, பெரு மையை உலகமே பாராட்டியது.
அன்றைக்கு 16 ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்து வந்த விருதுநகரில் மேகவர்ணம் என்ற பிரிவினரைச் சேர்ந்த பிரபல வியாபாரியான குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மையாருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காமராசர் பிறந்தார். அங்கே சத்திரிய வித்தியா சாலை என்ற பள்ளியில் அவர் 6-ஆம் வயதில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிக் கூடத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கைப்பிடி அரிசி கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஆதலால் இப்பள்ளி பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. காமராசரின் 12-ஆம் வயதிலேயே அவரது தந்தையார் எதிர்பாராது முடிவெய்திய காரணத்தால் அவரது பள்ளி செல்லும் வாய்ப்பு நிறுத்தப்பட்டது.
1920-ஆம் ஆண்டு காந்தி அறை கூவல் விடுத்த ஒத்துழையாமைப் போராட்டத் தின்போது காமராசர் அதை ஏற்று, போராட்டத்தில் பங்குகொண்டார். விருதுநகரில் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்கள் எல்லாவற்றுக்கும் நடந்தே சென்றுதான் பிரச்சாரம் செய்தார். ஒரு முறை 60 கிலோ மீட்டர் சுற்றி மதுரைக்கு நடந்து சென்று கட்சிப் பணியாற்றி விட்டுத் திரும்பி வந்தார்.
1924 தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்திய போராட்டத்தில் ஒரு தொண்டராக காமராசர் விருதுநகரி லிருந்து சென்று வந்தார்.
காங்கிரஸ் தலைவராக 1940-இல் காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவரைத் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. 1941-இல் அவர் சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடு தலையாகி வெளியே வந்து நகராட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தி விட்டுப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்தப் பதவியில் இருந்தால் காங் கிரஸ் கட்சியின் இதர கட மைகளையெல்லாம் கவனித்துச் செய்ய முடியாது என்ற கார ணத்தால்தான் அப்பதவியிலி ருந்து விலகினேன் என்று அவர் சொன்னார். அதுபோலவே பொதுத் தொண்டு செய்பவருக் குத் திருமணம் ஒரு தொல்லை என்று முடிவு செய்து திருமணத்தைத் தவிர்த்து கடைசிவரை பிரமச்சாரியாகவே வாழ்ந்து தொண் டாற்றினார்.
காந்தியார் நடத்திய 1942 ஆகஸ்டு 9 வெள்ளையனே வெளியேறு என்ற மாநாட்டிலும் இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தார். 1952இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது நடைபெற்ற முதல் இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனா லும் காங்கிரசேதான் கூட்டணி மந்திரி சபை அமைத்தது. இராஜாஜி முதலமைச் சரானார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த 12 ஆயிரம் பள்ளிகளில், அரசு நிதி நெருக் கடியைக் காரணம் காட்டி 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களை இராஜாஜி மூடினார். மீதி இருந்த பள்ளிகளிலும் அரை நேரப்படிப்பும் மீதி அரைநேரம் அவரவர் குலத் தொழிலைச் செய்தால் போதுமானது என்கிற கல்வித் திட் டத்தைக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியார் இத்திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று சொல்லி இதனால் தமிழர்களின் எதிர்காலம் இருளடைந்து பாழாகிவிடும் எனவும் எச்சரிக்கை செய்தார். இத்திட்டத்தை ஒழிக்க பெரியார் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படையை அமைத்தார். அந்தப் பிரச்சாரப் படை நீடாமங்கலம் .ஆறுமுகம் தலைமையில் நாகப்பட் டினத்திலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது. இக்குலக்கல்வித் திட்டத்தின் தீமைகளை விளக்கி வழியெங்கும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து கொண்டே இக்குழு வந்தது. பொதுமக்களிடையே குலக்கல்வித் திட்டத்திற்கான எதிர்ப்பு வலுவடைந்ததைக் கண்ட இராஜாஜி தமக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லி முதலமைச்சர் பதவியை இராஜி னாமா செய்தார்.
தந்தை பெரியார் வலியுறுத்தியதன் பேரில் காமராஜர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடனேயே குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார். இராஜாஜி மூடிய 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களையும் மீண்டும் திறந்தார். மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற கொள்கையை வகுத்துத் தமிழ்நாடு முழுவதும் உடனே செயல்படுத்தினார். பெரியார் காமராசரைக் கல்வி வள்ளல் என்று அழைத்துப் பாராட்டினார். தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி வரலாற்றில் காமராசர் வகிக்கும் மகத்தான பங்கில் உரிமை கொண்டாட வேறு யாருக்கும் அருகதை கிடையாது என்று தந்தை பெரியார் சென்னை கலைவாணர் அரங் கில் நடைபெற்ற பச்சைத் தமிழர் காமராசர் விழாவின் போது தன் கைப்பட எழுதிய செய்தியை அனுப்பிவைத்தார்.
ஏழைப்பங்காளர் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் இணையற்ற முதலமைச்சராக மிகக் குறைந்த அளவில் எட்டு பேர் அடங்கிய மந்திரி சபையைக் கொண்டு சேவை செய்தார். அவரது அமைச்சரவையில், சட்டசபையில் காங் கிரசை எதிர்த்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியையும் ஒரு அமைச் சராக சேர்த்துக் கொண்டு காங்கிரசுக்கு வெளியே இருந்த எதிர்ப்பையும் இல்லாமல் செய்து கொண்டு அவரது அணுகுமுறை எல்லோராலும் பின்பற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
அப்போது ஒரு முறை காமராசர் குறிப்பிட்டார். நான் பல்கலைக் கழகங் களில் படித்தது இல்லை. ஆனால் எனக்கு பூகோளம் தெரியும். சென்னை மாகாணத் தில் உள்ள எல்லா இடங்களையும் நான் அறிவேன். ஏரிகள் எங்கெங்கு இருக் கின்றன, மக்கள் என்னென்ன தொழில் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்திருக்கிறேன். இதையெல்லாம் பூகோளம் என்று கருத வில்லை என்றால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
வெறும் கோடுகளால் எல்லைகள் வகுத்து புள்ளிகளால் இடங்களைக் குறிப்பதுதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தேவையில்லை என்றார்.
அவரது சிந்தனை, உழைப்பு, ஊக்கம் எப்போதும் தெளிவாக இருந்தது, உறுதி யாக இருந்தது. ஏழை மக் களின் துயர் துடைப்பதையே முக்கிய அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் அடுத்த படியாக அதிக கவனம் எடுத்துக் கொண்ட துறைகளில்  மின்சாரம் முத லிடம் பெற்றது. அடுத்தது போக்குவரத்து. இவை இரண்டும் மக்கள் வாழ்க் கைக்கு மிகச் சிறந்த ஏற்றத்தைக் கொடுத்தன.
காமராசரின் நடைமுறை அறிவு எத்தனையோ பட்டப் படிப்பு படித்தவர்களை விட மேலானது. ஒரே ஒரு உதா ரணம். அப்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை வந்தார். அவ்விழாவில் உரையாற்றும்போது, விஞ்ஞானிகள் எல்லாம் விவசாயிகள் வாழ்வு மேம்பட உழைக்க வேண்டும். தமிழ்நாட்டின் கால்நடைச் செல்வத்தை அதிகப்படுத்திப் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேருவை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு வந்த கையோடு கால்நடைக் கல்லூரி முதல்வரையும், துறை இயக்குநரையும், அரசு செயலாளரையும் அழைத்து இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்று கலந்து ஆலோசித்தார்.
அப்போது பக்தவத்சலம் இத்துறையில் அமைச்சராக இருந்தார். ஓராண்டுக்கு எத்தனை கால்நடை மருத்துவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள்? என்று அதிகாரிகளிடம் கேட்க, அப்போது ஆண்டுக்கு 60 பேர் என்று சொன்னார் கள். தமிழ்நாட்டுக்கு 12 ஆயிரம் பஞ் சாயத்துகளிலும், கால்நடை கருவூட்டல் நிலையங்களில் நியமிக்க ஆண்டுக்கு 60 பேர் என்றால் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க முடியாது. நம் பிரதம மந்திரி சொன்னதை நாம் எப்படிச் செய்வது என்று யோசியுங்கள் என்று சொல்லி அதிகாரிகளை அனுப்பிவிட்டார். அப் போது மத்திய அரசு கேந்திர கிராமத் திட்டங்களை நிறைவேற்ற பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அடுத்த நாள் முதலமைச்சர் காமராசர் அதிகாரிகளை அழைத்துச் சொன்னார்: தமிழ்நாட்டில் பள்ளி இறுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் கால்நடை அபிவிருத்தி பற்றி சிறப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்த ஒசூர், ஒரத்த நாடு, புதுக்கோட்டை, செட்டிநாடு, அபி ஷேகப்பட்டி முதலான கால்நடைப் பண் ணைகளில் எல்லாம் கால்நடை அறிவிய லின் அடிப்படைகளை நடை முறைப் பயிற்சிகளோடு (Practical Training) சொல் லிக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாக்மேன் கோர்ஸ் ஆரம்பிக்க ஆணையிட்டார்.
Anatomy, Psychology, Penacitalogy, Bactrerialogy, Animal Husbandry, Material Media, Sanitational Hygene and Handling of Animals   என்ற சுமார் 8 பொருள்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு கால் நடை ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்களில் நியமிக்கப்பட்டார்கள்.  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை அபி விருத்தி கிளை நிலையங்களில் செயற்கை முறை கால்நடைக் கருவூட்டல் பணிகள் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
- இரா. இரத்தினகிரி