லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

திங்கள், 9 மே, 2011

நாயக்கன்சோலை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 








கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; தமிழ்நாடு அறக்கட்டளை; நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்; நாயக்கன்சோலை கிராம மக்கள்; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நாயக்கன் சோலை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 

ஊர் பிரமுகர் தியாகராஜா வரவேற்றார். கிராம தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, தேவதாஸ், பள்ளி ஆசிரியர் அனிதா, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் மற்றும் டாக்டர்கள் 100 நோயாளிகளை பரிசோதனை செய்தனர். அதில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டிக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக