லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வியாழன், 14 ஜூலை, 2011

சாதித்தவர்களுக்கு கவுரவம்

பந்தலூர் : பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
          பந்தலூரில் செயல்பட்டு வரும் காந்தி பொது சேவை மையம் சார்பில், பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மையத்தின் அமைப்பாளர் நவுசாத் வரவேற்றார். 
        பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தியாகராஜா, பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற விந்துஜா ஆகியோருக்கு, பந்தலூர் துணை தாசில்தார் குமார்ராஜா பணமுடிப்பு மற்றும் கேடயம் வழங்கினார். 
              பள்ளி தலைமையாசிரியர் சாமுலேசன் தலைமை வகித்தார். 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்ப மைய தலைவர் சிவசுப்ரமணியம், பி.எஸ்.என்.எல். அதி­காரி முத்துகிருஷ்ணன், மையத்தின் தலைவர் தாஸ் முன்னிலை வகித்தனர். 
    நிகழ்ச்சியில் காந்திசேவை மைய நிர்வாகிகள் சுரேஷ், ஜாபர்சாதிக், செந்தாமரை, சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக