ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, நேரு யுவ கேந்திரா மற்றும் மக்கள் குரல் நீலகிரி கிளை ஆகியன் இணைந்து ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின
நிகழ்ச்சியில் பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தலைமை வகித்து பேசும்போது
நாம் அனைவருக்கும் முக்கிய கடமை வாக்களிப்பது. எனவே ஒவ்வருவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் முன் நல்லவரை தேர்வு செய்வதை உறுதி செய்து கொண்டு காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். ஊரில் உள்ள மற்றவர்களிடமும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்து கூறி வாக்களிக்க செய்ய வேண்டும். அனைவரும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்தால் தான் மக்களாட்சி வலிமை பெறும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது வக்களிப்பதாலே நம்முடைய உரிமையை சரியாக செய்கிறோம் என்பதற்கு முக்கிய சாட்சியாகும். வாக்களிக்கும் முன் நல்லவருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக வாக்கு சாவடி அலுவலர்களிடம் பூத் சிலிப் எனப்படும் வக்குக்கான சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வாக்களிக்காத பட்சத்தில் அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி கள்ள ஓட்டாக பதிவு செய்ய வழிவகுக்கும் எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் யாரையும் பிடிக்காவிட்டால் பிரிவு 49 O ன் படி நோட்டா என்ற பட்டனில் வாக்கினை பதிவு செய்யலாம். ஓட்டுக்கு பணம் கொடுத்தல், மற்றும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்தால் மாவட்ட நிர்வாகதின் சார்பில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு 18004257025 என்ற இலவச எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்றார்.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் விளக்கம் அளித்தனர் தொடர்ந்து பயிற்சி மைய மகளிர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப பட்டது.
அதுபோல ஊட்டி A T C பேருந்து நிலையம் மார்க்கெட் ஆகிய பகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் மாணவர்கள் வியாபாரிகள் என பல தரப்பினரிடையே வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படு த்த பட்டது. இதில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சோலூர் கணேஷன், கேத்தி நஞ்சன், ராஜுப்பெட்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் மக்கள் குரல் நீலகிரி கிளை ஆகியன இணைந்து
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டன.
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டன.
குன்னூர் பகுதியில் நடத்திய நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் டேவிட், கிப்சன், ஜெயபிரகாஷ், விஜயகுமார், செல்வி, இந்திராணி உள்ளிட்ட பலர் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் மாணவர்கள் வியாபாரிகள் என பல தரப்பினரிடையே வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படு த்த பட்டது. கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளக்கி பொது மக்களிடம் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நுகர்வோர் மையம், மாவட்ட கூட்டமைப்பு மற்றும் கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக