லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்
லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்
மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884
லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் பந்தலூர் 643233.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
வியாழன், 14 ஜூலை, 2011
சாதித்தவர்களுக்கு கவுரவம்
பந்தலூர் : பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பந்தலூரில்
செயல்பட்டு வரும் காந்தி பொது சேவை மையம் சார்பில், பந்தலூர் அரசு மேல்நிலை
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மையத்தின் அமைப்பாளர் நவுசாத்
வரவேற்றார்.
பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தியாகராஜா, பத்தாம்
வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற விந்துஜா ஆகியோருக்கு, பந்தலூர் துணை
தாசில்தார் குமார்ராஜா பணமுடிப்பு மற்றும் கேடயம் வழங்கினார்.
பள்ளி
தலைமையாசிரியர் சாமுலேசன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள
சுற்றுச்சூழல் பாதுகாப்ப மைய தலைவர் சிவசுப்ரமணியம், பி.எஸ்.என்.எல்.
அதிகாரி முத்துகிருஷ்ணன், மையத்தின் தலைவர் தாஸ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் காந்திசேவை மைய நிர்வாகிகள் சுரேஷ், ஜாபர்சாதிக், செந்தாமரை,
சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செவ்வாய், 5 ஜூலை, 2011
ஆதிவாசி மாணவிக்கு பரிசு
ஆதிவாசி மாணவிக்கு பரிசு
ஜூலை 2: கூடலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆதிவாசி மாணவி சந்திரிகாவுக்கு காந்தி சேவா மையம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது ஜ் பரிசளிப்பு விழாவில் தலைவர் தாஸ், செயலாளர் சந்திரன், நவுஷாத், துணைத் தலைவர் அகமது கபீர், செயற்குழு உறுப்பினர்கள், சேரன் அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும் கல்வி ஊக்கத்தொகை
செவ்வாய், 5 ஜூலை, 2011 பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் கடந்த பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசும் கல்வி உக்கத்தொகையும் வழங்கப்பட்டது
பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் 2011 மார்ச் மதம்
நடந்த போது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும் கல்வி
ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி யில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சமுலேசன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்ரமணியம் கூடலூர் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர் செல்வராஜ் பி எஸ் என் எல் முத்து கிருஷ்ணன் காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைவர் தாஸ் செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை வட்டாச்சியர் குமாரராஜா பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் தியகராஜாவிற்க்கும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி விந்துஜவிற்க்கும் கேடயம் மற்றும், கல்வி உதவித்தொகை ரூ.1000 /- வழங்கினார் .
நிகழ்ச்சியில் மைய நிர்வாகிகள் சுரேஷ் ஜாபர் சாதிக் செந்தாமரை சாதிக் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி யில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சமுலேசன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்ரமணியம் கூடலூர் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர் செல்வராஜ் பி எஸ் என் எல் முத்து கிருஷ்ணன் காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைவர் தாஸ் செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை வட்டாச்சியர் குமாரராஜா பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் தியகராஜாவிற்க்கும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி விந்துஜவிற்க்கும் கேடயம் மற்றும், கல்வி உதவித்தொகை ரூ.1000 /- வழங்கினார் .
நிகழ்ச்சியில் மைய நிர்வாகிகள் சுரேஷ் ஜாபர் சாதிக் செந்தாமரை சாதிக் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
வெள்ளி, 27 மே, 2011
மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!
மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!
“நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!
வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச்
சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எது மரபணு (Gene)?
ஒவ்வொரு உயிரிலும், அதன் குரோமோசோம்களில் மரபுத் தன்மையை (கறுப்பு மயிரா,
கருப்பு கருவிழியா, பழுப்புத் தோலா, குட்டையா, நெட்டையா எனும் உண்மைகளைக்)
கொண்டிருக்கும் DNA குழுமத்தை மரபணு என்கிறார்கள். A,D,C,G எனும் நான்கு
வித புரதங்களால் double=helix முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புரதக்
கூட்டுதான் நம் வாழ்வின் ‘அடிப்படை ஆதாரம்' என்றால் இன்றளவில் அது
மிகையல்ல, நாயைக் கண்டால் மிரள்வதும், பெண்ணை கண்டால் வழிவதும், 4 வயதில்
வரும் அம்மை, 40 வயதில் வரும் வயிற்றுப்புண், புற்று என நடக்கும்
எல்லாவற்றிற்கும் இப்புரதக் கூட்டு காரணமாயிருக்கிறது.
அதே போல், ஒரு தாவரம் குட்டையாக வளர வேண்டுமா? மஞ்சள் பூ பூக்க வேண்டுமா?
என அத்தனையும் அம்மரபணுவின் புரதப் புரோகிராம்கள் தான் நிர்ணயிக்கின்றன.
எவை மரபணு மாற்றப் பயிர்கள் (Genetically Modified Organism)?
காலை அகட்டி பாதங்களால் பற்றி, மரமேறி கொட்டைப்பாக்கு எடுக்க முடியாது.
கைக்கெட்டும் தூரத்தில் பாக்கு விளைந்தால் என்ன? எப்பவும் அழுகாத பழங்கள்,
‘சாலடு’க்கு வெட்ட ஏதுவான தடிப்புத் தோலுடன் தக்காளி, புழு துளைக்காத
கத்தரி, பூச்சி அண்டாத பயிரினங்கள், வறட்சியிலும் வாடாத கிரானைட்'
காய்கறிகள்'', என இந்த பூவுலகின் ‘தாதா' மனிதன் எதற்கும் மெனக்கெடாது
இருக்க விளைபொருளில் நடக்கும் விஞ்ஞான விளையாட்டுதான் மரபணு மாற்றப்
பயிர்கள். எப்படி?
உதாரணத்திற்கு, குதிரைபோல் ஓடும் நல்ல வேகமான திறனுடைய மகவு வேண்டுமெனில்,
பிறந்த குழந்தைக்கு தொடந்து பயிற்சி கொடுத்து பழக்க வேண்டியதில்லை. ஒரு
குதிரையைப் புணர்ந்து, அதில் உருவாகும் கருவை உடைத்து, அதன் குரோமோசோமைச்
சிதைத்து, அதன் DNA-ஐ வெட்டி எடுத்து தன் துணையின் கரு முட்டையில்
நுழைத்து, பிள்ளையை பிரசவித்தால் அக்குழந்தை குதிரை போல் ஒடலாம்.
ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கலாம்! என்ன? கொஞ்சம் வாய் நீளமாகவும்,
பின்பகுதியில் வாலும், கால் கைகளில் குளம்பும் இருக்கலாம்! அதனால் என்ன?
குழந்தை குதிரை போல் ஓடும்! கற்பனை செய்யவே ‘பயங்கரமாக' உள்ளதல்லவா? இது
தான் இந்த மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி தாரக மந்திரம்.
தனக்கு, தன் சந்தைக்கு வேண்டிய பயிரை உற்பத்தி செய்ய, பயிரின் மரபணுவை
மாற்றம் செய்தோ, சிதைத்தோ அதே குடும்பப் பயிர் அல்லது வேறு உயிரின் (அது
பாக்டீயாவோ, டைனசரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) மரபணுவினை வெட்டி
ஒட்டியோ, புதிய பயிரை உருவாக்குவது தான் இந்த மரபணு மாற்றப்பயிர்.
பயிர்பாதுகாப்பு, புழுக்களில் இருந்தும் வைரசுகளிலும் இருந்து பாதுகாப்பு,
களைகளை மீறி பயிர் வளரும் தன்மை என்ற காரணங்களுக்காகவே இந்த வித்தை
பயன்படுத்தப்படுவதாக, விஞ்ஞான மேதாவிக் கூட்டம், மான்சான்டோ தலைமையில்
கூறிவந்தாலும், உட்காரணம் மற்றும் ஒரே காரணம் மொத்தமாய் உழவுச் சந்தையை
அபகரிக்க நினைப்பது மட்டுமே. கூடுதலாய், சமீபத்திய உலகளாவிய உணவுப்
பற்றாக்குறைக்கு ஒரே நிவாரணமாகவும் இவை உருப்பெற்று வருவது அவர்களது
சமீபத்திய சாதனை.
‘இது ஒன்றும் புதிதல்ல' எனும் வாதமும் சில விளக்கங்களும்…
உங்கள் கொள்ளுத் தாத்தாவின் குணங்களைவிட உங்கள் உடல்நலத்தின் வளத்திலும்
ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் பெற்றிருக்கக்கூடும். கடந்து வந்த
சமூகச் சூழலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மரபு தகவமைத்துக் கொண்ட
விளைவு அது. விதையுடன் இருந்த வாழைப்பழம் இப்போது விதையற்று இருப்பதும்,
பெரிய நெல்லிக்கனி போலிருந்த தக்காளி இப்போது இப்படி இருப்பதும் என்றோ,
பாக்டீரியாவாய் இருந்த பச்சையம் (Chlorophills) இன்று தாவர பகுதியாய்
மாறியதும் மரபணு மாற்றத்தால்தான். ஆனால் அவை நிகழ 15 முதல் 20 மில்லியன்
ஆண்டுகள் வரை ஆனது. இயற்கையை சிதைக்காமல், பல்லுயிர் ஒம்பி படைக்கப்பட்ட
சந்ததிகள் அவை. ஒரு சிம்பன்ஸி குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்.
ஆனால், அது நிகழ 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாம்.
இப்படி நிகழும் இயற்கை மாற்றங்களை பல நூறுகோடி ரூபாய் கொண்டு உருவாக்கிய
ஆய்வறையில் மரபணுவை வெட்டி ஒட்டி நிகழ்ந்த “DOLLY”க்களை உருவாக்குவதும் BT
பருத்தி, BT அரிசி, BT சோளம் உருவாக்குவதும் எப்படி ஒன்றாகும்?
முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு!
‘பேசிலஸ் துருஞ்சியேனம்' எனும் பாக்டீயாவின் மரபை கத்தரிக்காயின்
மரபணுவுடன் ஒட்டி, பிறக்கும் (உருவாக்கும்) கத்தரி மரபில் அந்த
பாக்டீயாவின் ஒட்டபட்ட மரபணு உருவாக்கும் Toxin இருப்பதால் புழு நுழையாது
என்கின்றனர். “அந்த நஞ்சு நம்மைத் தாக்காதா?” என்றால், “அதிகம் சாத்தியமில்லை, வெகுசிலருக்கு லேசான அரிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்” என்கின்றனர் மிக அலட்சியமாக.
முதலில் இது
தேவையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக “இல்லை'' என்பது அதைப் படைத்த
“பிரம்மா''க்களுக்கும் தெரியும். அடுத்து பாதுகாப்பானதா? என்றால் உலக
சுகாதார நிறுவனமே மழுப்புகிறது (http://www.who.int/foodsafety/publications/biotech/20questions/en/).
மரபணு மாற்றப் பயிர்கள் எப்படி மனித நலத்தை பாதிக்கும்?
ஒவ்வாமை (Allergenicity) மரபணு ஊடுருவல் (Gene Transfer) வெளிபரவுதல் (Out
Crossing) என்று மூன்று முக்கிய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன.
ஒவ்வாமை (Allergenicity)
மல்லிகையை நுகர்ந்தால் களிக்கும் நம் மனம், அம்மோனியாவை நுகரும் போது
சுளிப்பதும், இன்னும் வீரிய நைட்ரஜன் வேதிப் பொருட்களை நுகரும் போது
உடம்பெல்லாம் தடிப்பது, மூச்சிரைப்பது என நோயைத் தருவதைதான் ஒவ்வாமை
என்கின்றனர். அது உடனடி நிகழ்வாய் (hypersensitivity) இருக்கலாம்; அல்லது
நாட்படவும் நிகழலாம். உடனடியாய் நிகழும் போது, Urticaria (உடல் முழுதும்
வரும் தடாலடியான அரிப்பும், தடிப்பும்) மூக்கடைப்பு மற்றும் இரைப்பு
(sinusitis & asthma), குமட்டல், வயிறு பிரட்டல், வாந்தி, (Nausea
vomitting) தடாலடியாக மரணம் (anaphaloxis shock) ஆகியன ஏற்படக் கூடும்.
நாட்பட நிகழ்வது Celiac disease, தோல் கரப்பான்கள், ஆஸ்துமா, மூட்டுவலிகள்,
auto-immune disorders என பல வகை நோய்களை உருவாக்கும். இன்னும் காரணம்
கண்டறியப்படாத பல நோய்கட்கு, இந்த மாதிரி உடலுக்குள் நுழையும் நச்சுக்கள்
காரணமாக இருக்கக் கூடும்.
மரபணு ஊடுருவல் (Gene Transfer)
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில்
ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும்
பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள்
கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல்
குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி
காய்க்கவும் வாய்ப்புண்டு. அல்லது குடலினுள் தோன்றும் புதிய உயிர்கள் புதிய
நோய்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு, திடீர் சிக்கன் குனியா, பறவைக்
காய்ச்சல், ஏன் HIV குறித்தும் இது போன்ற ஐயங்கள் உண்டு.
வெளிபரவல் (Out Crossing)
இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கண்ணாடி குடுகைக்குள்
விளைவிக்கப்பட போவதில்லை, விளைநிலத்தில் பயிராகும் போது மகரந்த
சேர்க்கையில். பக்கத்து நிலத்து மாசற்ற பயிருக்கும், மூலிகைக்கும் ஊறு
விளைவித்து எது GMO? என்ற கேள்வி கேட்கும்படி மொத்தமாய் கலந்துவிடவும்
வாய்ப்புண்டு.
பதிலளிக்கப்படாத பல கேள்விகள்
“மரபணு புரதம் வயிற்றுள் சென்றவுடன் சிதைந்துவிடும், பயப்படத் தேவையில்லை.
சிலருக்கு வேண்டுமாணால் சங்கடம் ஏற்படலாம்'' என்கிறது மான்சான்டோ கூட்டம்.
ஆனால் அந்த “சிலர்'' இந்தியரோ அல்லது ஆப்பிரிக்கரோ அல்லது ஒடுக்கப்பட்ட
இனமோ/நாடாக மட்டும் என இருப்பது ஏன்? மான்சாண்டோ நிறுவனம் உள்ள அமெரிக்க
நாட்டின் விளைநிலத்தில் ஆய்வு நடத்த கூடாது. அதன் துணை குழுமங்கள் உள்ள
ஐரோப்பிய கண்டத்தில் GMOக்கள் நுழைய கூடாது. நம் நாட்டில் மட்டும்
குப்பனும் சுப்பனும் ''அந்த சிலராக'' சங்கடப்படவேண்டும் என்று சொல்வதுதான்
Globalisation நியதியா ?
மரபணு புரதங்கள் ஒவ்வாமை தராது என்று இன்னும் முழுமையாக ஒரு ஆய்வும் வரவில்லை.
அந்த புரதங்களை தெளிவாக அளவிடும் அளவுகோள்கள், எவை ஒவ்வாமை புரதங்கள் என அளவிட முடியவில்லை.
தற்போதுள்ள சோதனைகளின் தரம் (Standard) அதன் வரைஎல்லை (Limitation) பற்றி தெளிவான கருதுகோள்களோ ஆய்வுகளோ இல்லை.
எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன்
முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும்
கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத்
தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன்
கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய்
நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!
சுற்றுச் சூழலை பாதுகாக்க சில வழிகள்
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
|
பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் மரகன்றுகளை நடலாமே.
|
தண்ணீர், காகிதம், ஆற்றல் மூலங்களை வீணாக்காமல் பாதுகாக்கலாமே!
|
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாமே
|
மிக குறுகிய தூரங்கள் செல்வதற்கு மிதி வண்டி(அ) நடைபயிற்சி மேற்கொள்ளலாமே
|
மிக நீண்ட தொலைவு செல்வதற்கு வாகனங்களை பயன்படுத்தலாமே
|
குழல் விளக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை ஆற்றலை சேமிக்கலாமே
|
சூரிய ஆற்றல் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தலாமே.
|
வீட்டின் மேற்கூரைகளில் வீணாகும் உணவுப் பொருட்களை பறவைக்கு அளிக்கலாமே.
|
மக்கும் தன்மையுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்
|
குளிப்பதற்கு Shower-ஐ பயன்படுத்தலாமே குடிநீர் சிக்கனம் தேவை.
|
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
|
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
திங்கள், 9 மே, 2011
நாயக்கன்சோலை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; தமிழ்நாடு அறக்கட்டளை; நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்; நாயக்கன்சோலை கிராம மக்கள்; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நாயக்கன் சோலை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
ஊர் பிரமுகர் தியாகராஜா வரவேற்றார். கிராம தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, தேவதாஸ், பள்ளி ஆசிரியர் அனிதா, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் மற்றும் டாக்டர்கள் 100 நோயாளிகளை பரிசோதனை செய்தனர். அதில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
ஜன் லோக்பால் மசோதா
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
ஜன் லோக்பால் மசோதா
ஜன் லோக்பால் மசோதா அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவை இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்[1]. அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டு இன்றளவில் அது சட்ட வரைவாகவே உள்ளது.
ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]
முன்மொழியப்பட்டுள்ள சட்டமுன்வரைவில் காணும் முதன்மை கூறுகள்
- நடுவண் அரசு ஊழலெதிர்ப்பு அமைப்பாக "லோக்பால்" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) நிறுவிடவும் அவருக்குத் துணைபுரிய மாநில அளவில் "லோக் ஆயுக்தா" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நிறுவிடவும் வகைசெய்தல்.
- இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவண் தலைமைச் செயலகம் போல, லோக்பால் இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலரால் கண்காணிக்கப்படும். இதன்மூலம் இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில் எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி செயல்படும்.
- இதன் உறுப்பினர்கள் ஒளிவற்ற பங்குபெறும் செயல்பாட்டின் மூலம், நீதிபதிகள், தூய்மையான வரலாறுடைய இந்திய அரசு அதிகாரிகள், பொதுநபர்கள் மற்றும் அரசியலமைப்பின் கீழான அதிகாரிகளிலிருந்து நியமிக்கப்படுவர்.
- தேர்வாணைக்குழு ஒன்று குறுக்கப்பட்ட பட்டியலில் உள்ளோரை, பின்னாளில் பொதுவில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகளுடன், நேர்முகத் தேர்வு காணுதல்.
- ஒவ்வொரு மாதமும் தனது இணையதளத்தில் லோக் ஆயுக்தா தன்கீழுள்ள வழக்குகளின் பட்டியல், சுருக்கமான விவரங்கள், எடுக்கப்பட்ட செயல்களின் வெளிப்பாடு அல்லது எடுக்கவிருக்கும் செயல்கள் என பதிப்பிக்க வேண்டும்.மேலும் கடந்த மாதத்தில் பெறப்பட்ட குறைகள், நடப்பு மாதத்தில் தீர்வானவை மற்றும் நிலுவையிலுள்ளவை என அறிக்கை வெளியிடவேண்டும்..
- ஒவ்வொரு குறை/வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மொத்தமாக இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
- ஊழல் குற்றவாளியின் தண்டனையின் அங்கமாக அவரால் அரசுக்கு ஏற்பட்ட அனைத்து நட்டங்களையும் ஈடு கட்டுதல் அமைய வேண்டும்.
- ஏதேனும் அரசாங்க வேலை வரையறுக்கப்பட்ட காலக்கெடுவினுள் முடிக்கப்படாவிட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது "லோக்பால்" நிதி அபராதங்கள் விதித்து குறைபட்டவருக்கு அதனை ஈடாக கொடுக்க வகை செய்தல்.
- லோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும்.
- தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புகளான நடுவண் விழிப்புணர்வு ஆணையம், துறைசார் விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சிபிஐயின் ஊழல் எதிர்ப்புத்துறை ஆகியன "லோக்பால்" அமைப்போடு இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் லோக்பாலுக்கு எந்த அதிகாரி,நீதிபதி அல்லது அரசியல்வாதி குறித்த குறையையும் தன்னிச்சையாகவும் முழுமையாகவும் புலனாய்ந்து தண்டனை வழங்கும் முழுமையான கட்டமைப்பும் அதிகாரமும் கிடைக்கும்.
- லோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும்.
[தொகு]
சட்ட முன்வரைவினை வடிக்கும் கூட்டுக்குழு
ஜன் லோக்பால் மசோதாவின் வரைவினை வடிக்கும் கூட்டுக்குழுவில் பத்து அங்கத்தினர்களில் சரிசமமாக அரசு உறுப்பினர்களும் குடிமக்கள் சார்பாளர்களும் பங்கெடுப்பர்.[2] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்தக் கூட்டுக்குழு அமைப்பது குறித்தான அலுவல்முறை அறிவிப்பை இந்திய அரசிதழில், வெளியிட்டுள்ளது. இதன் நகலொன்றை இங்கே காணலாம்.
[தொகு]
தலைவர்
கூட்டுக்குழுவின் தலைமை ஓர் அரசியல்வாதியிடமும் இணைத்தலைமை ஓர் மககள் சார்பு செயலாக்கவாதியிடமும் இருக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசியல் வெளியிலிருந்து பிரணப் முக்கர்ஜியும் குடிமக்கள் தரப்பிலிருந்து சாந்தி பூசணும் தலைவர்களாக இருப்பார்கள்.
[தொகு]
அரசு சார்பாளர்கள்
ஐந்து ஆய அமைச்சர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:
- பிரணப் முக்கர்ஜி, இந்திய நிதி அமைச்சர், இணைத்தலைவர்(சாந்தி பூசணுடன்)
- ப. சிதம்பரம், உள்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
- வீரப்ப மொய்லி, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
- கபில் சிபல், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், குழு அங்கத்தினர்
- சல்மான் குர்சித், நீர்வளத்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
[தொகு]
குடிமக்கள் சார்பாளர்கள்
ஐந்து மாண்புமிகு சமூக சேவகர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:
- சாந்தி பூசண், முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், இணைத்தலைவர் (பிரணப் முக்கர்ஜியுடன்)
- அண்ணா அசாரே, சமூக போராளி, குழு அங்கத்தினர்
- பிரசாந்த் பூசண், வழக்கறிஞர், குழு அங்கத்தினர்
- என். சந்தோசு எக்டே, லோக் ஆயுக்தா (கர்நாடகா), குழு அங்கத்தினர்
- அரவிந்த் கெஜ்ரிவால், RTI போராளி, குழு அங்கத்தினர்
[தொகு]
மேலும் காண்க
[தொகு]
மேற்கோள்கள்
- ↑ பிடிஎஃப் வடிவில் ஜன்லோக்பால் சட்ட முன்வரைவு
- ↑ http://lawmin.nic.in/bills/lokpal.pdfகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
ஜன் லோக்பால் மசோதா
ஜன் லோக்பால் மசோதா அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவை இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்[1]. அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டு இன்றளவில் அது சட்ட வரைவாகவே உள்ளது.ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.பொருளடக்கம்
[மறை][தொகு]
முன்மொழியப்பட்டுள்ள சட்டமுன்வரைவில் காணும் முதன்மை கூறுகள்- நடுவண் அரசு ஊழலெதிர்ப்பு அமைப்பாக "லோக்பால்" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) நிறுவிடவும் அவருக்குத் துணைபுரிய மாநில அளவில் "லோக் ஆயுக்தா" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நிறுவிடவும் வகைசெய்தல்.
- இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவண் தலைமைச் செயலகம் போல, லோக்பால் இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலரால் கண்காணிக்கப்படும். இதன்மூலம் இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில் எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி செயல்படும்.
- இதன் உறுப்பினர்கள் ஒளிவற்ற பங்குபெறும் செயல்பாட்டின் மூலம், நீதிபதிகள், தூய்மையான வரலாறுடைய இந்திய அரசு அதிகாரிகள், பொதுநபர்கள் மற்றும் அரசியலமைப்பின் கீழான அதிகாரிகளிலிருந்து நியமிக்கப்படுவர்.
- தேர்வாணைக்குழு ஒன்று குறுக்கப்பட்ட பட்டியலில் உள்ளோரை, பின்னாளில் பொதுவில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகளுடன், நேர்முகத் தேர்வு காணுதல்.
- ஒவ்வொரு மாதமும் தனது இணையதளத்தில் லோக் ஆயுக்தா தன்கீழுள்ள வழக்குகளின் பட்டியல், சுருக்கமான விவரங்கள், எடுக்கப்பட்ட செயல்களின் வெளிப்பாடு அல்லது எடுக்கவிருக்கும் செயல்கள் என பதிப்பிக்க வேண்டும்.மேலும் கடந்த மாதத்தில் பெறப்பட்ட குறைகள், நடப்பு மாதத்தில் தீர்வானவை மற்றும் நிலுவையிலுள்ளவை என அறிக்கை வெளியிடவேண்டும்..
- ஒவ்வொரு குறை/வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மொத்தமாக இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
- ஊழல் குற்றவாளியின் தண்டனையின் அங்கமாக அவரால் அரசுக்கு ஏற்பட்ட அனைத்து நட்டங்களையும் ஈடு கட்டுதல் அமைய வேண்டும்.
- ஏதேனும் அரசாங்க வேலை வரையறுக்கப்பட்ட காலக்கெடுவினுள் முடிக்கப்படாவிட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது "லோக்பால்" நிதி அபராதங்கள் விதித்து குறைபட்டவருக்கு அதனை ஈடாக கொடுக்க வகை செய்தல்.
- லோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும்.
- தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புகளான நடுவண் விழிப்புணர்வு ஆணையம், துறைசார் விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சிபிஐயின் ஊழல் எதிர்ப்புத்துறை ஆகியன "லோக்பால்" அமைப்போடு இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் லோக்பாலுக்கு எந்த அதிகாரி,நீதிபதி அல்லது அரசியல்வாதி குறித்த குறையையும் தன்னிச்சையாகவும் முழுமையாகவும் புலனாய்ந்து தண்டனை வழங்கும் முழுமையான கட்டமைப்பும் அதிகாரமும் கிடைக்கும்.
- லோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும்.
[தொகு]
சட்ட முன்வரைவினை வடிக்கும் கூட்டுக்குழுஜன் லோக்பால் மசோதாவின் வரைவினை வடிக்கும் கூட்டுக்குழுவில் பத்து அங்கத்தினர்களில் சரிசமமாக அரசு உறுப்பினர்களும் குடிமக்கள் சார்பாளர்களும் பங்கெடுப்பர்.[2] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்தக் கூட்டுக்குழு அமைப்பது குறித்தான அலுவல்முறை அறிவிப்பை இந்திய அரசிதழில், வெளியிட்டுள்ளது. இதன் நகலொன்றை இங்கே காணலாம்.[தொகு]
தலைவர்கூட்டுக்குழுவின் தலைமை ஓர் அரசியல்வாதியிடமும் இணைத்தலைமை ஓர் மககள் சார்பு செயலாக்கவாதியிடமும் இருக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசியல் வெளியிலிருந்து பிரணப் முக்கர்ஜியும் குடிமக்கள் தரப்பிலிருந்து சாந்தி பூசணும் தலைவர்களாக இருப்பார்கள்.[தொகு]
அரசு சார்பாளர்கள்ஐந்து ஆய அமைச்சர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:- பிரணப் முக்கர்ஜி, இந்திய நிதி அமைச்சர், இணைத்தலைவர்(சாந்தி பூசணுடன்)
- ப. சிதம்பரம், உள்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
- வீரப்ப மொய்லி, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
- கபில் சிபல், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், குழு அங்கத்தினர்
- சல்மான் குர்சித், நீர்வளத்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்
[தொகு]
குடிமக்கள் சார்பாளர்கள்ஐந்து மாண்புமிகு சமூக சேவகர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:- சாந்தி பூசண், முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், இணைத்தலைவர் (பிரணப் முக்கர்ஜியுடன்)
- அண்ணா அசாரே, சமூக போராளி, குழு அங்கத்தினர்
- பிரசாந்த் பூசண், வழக்கறிஞர், குழு அங்கத்தினர்
- என். சந்தோசு எக்டே, லோக் ஆயுக்தா (கர்நாடகா), குழு அங்கத்தினர்
- அரவிந்த் கெஜ்ரிவால், RTI போராளி, குழு அங்கத்தினர்
[தொகு]
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)