லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

சாதித்த மாணவியருக்கு பரிசு, பண முடிப்பு

பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில்  பந்தலூர்  புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவியருக்கு பரிசு, பண முடிப்பு வழங்கப்பட்டது.  

 பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செயலாளர் சந்திரன் வரவேற்றார். அமைப்பாளர் நவுசாத் தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டாக்டர் கதிரவன்  கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி பிரியங்காவுக்கு நினைவு பரிசு மற்றும் பணமுடிப்பு வழங்ககினார். 

பள்ளி தலைமையாசிரியை செலீன் பேசினார். 

நிகழ்ச்சியில் மைய நிர்வாகிகள் செந்தாமரை, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். 

மைய நிர்வாகி  சிவசங்கரன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக