பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது.
இந்திய அரசு நேரு யுவ கேந்திர நீலகிரி மாவட்டம், பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் நடைபெற்றது
இப்போட்டியில் பந்தலூர் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனிய நடத்தப்பட்டது
இதில் சூப்பர் சீனியர் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவி சிவந்தமல்லி முதல் இடத்தினையும் புனித சேவியர் பள்ளி மாணவி காயத்திரி இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் . ஆண்கள் பிரிவில் பிதர்காடு அரசு பள்ளி மாணவன் ஜுனைஷ் முதல் இடத்தினையும் தேவாலா ஹோலி கிராஸ் பள்ளி மாணவன் பிரவீன் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்.
சீனியர் 17வயதுக்குட்பட்டோரில் பெண்கள் பிரிவில் பந்தலூர் டியூஸ் பள்ளி மாணவி ஜெரால்டு மரிய சுவேதா முதல் இடத்தினையும் புனித சேவியர் பள்ளி மாணவி ஆரோக்கிய டால்மியா இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் . ஆண்கள் பிரிவில் எம் எஸ் எஸ் பள்ளி மாணவன் அபிஜித் முதல் பரிசினையும் எருமாடு அரசு பள்ளி மாணவன் அனூப் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்
ஜூனியர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் புனித சேவியர் பள்ளி மாணவி சிந்தியா முதல் இடத்தினையும், கையுன்னி பள்ளி மாணவி ஜான்சி புளோரா இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் ஆண்கள் பிரிவில் பக்கனா அரசு பள்ளி மாணவன் ஷம்னாஜ் முதல் இடத்தினையும் கையுன்னி பள்ளி மாணவன் அஜய் இரண்டாம் இடத்தினையும் பிடித்தனர்.
பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைமை தங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பள்ளி ஆசிரியர்கள் உஷா மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்கலை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், பந்தலூர் புனித சேவியர் பள்ளி தாளாளர் ஜான்சி ஆகியோர் வழங்கினார்கள்.
சதுரங்க விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக