பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன் இணைந்து பந்தலூர் பஜாரில் நேதாஜியின் 70வது நினைவு தினம் மற்றும் நாட்டின் விடுதலைக்கு போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சுதந்திர போராட்டம் முதல் தற்போது வரை தேசத்திற்காக போரடி உயிர் நீத்த அனைத்து தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்த பட்டது. நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் செல்வராஜா, பொறுப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன் துணை தலைவர் அகமது கபீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக