லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா

சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா

பந்தலூர் பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு காந்தி சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை  வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் செலின், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தேவாலா G.T.R பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன், கூட்டுறவு பண்டக சாலை மேற்பார்வையாளர் செல்வராஜ், மைய நிர்வாகிகள் காளிமுத்து, செந்தாமரை ஆகியோர் பள்ளியில் முதல் முன்று இடங்களை பிடித்த முதல் மதிப்பெண் மஞ்சு (481), இரண்டாம் மதிப்பெண்  நிதாசந்திரன் (477), மூன்றாம் மதிப்பெண் ஆரோக்கிய டால்மியா (475) ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மைய நிர்வாகிகள் கபீர், அபுதாகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி நுகர்வோர் மன்ற ஆசிரியர் மார்டின் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் சுகைனா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக