லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வெள்ளி, 29 ஜூலை, 2016

பழ

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.
ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 666 மைக்ரோகிராம் உள்ளது. மேலும் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம்.
நெல்லிக்கனி
நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களுடன் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’ சிறிதளவு உள்ளன. எனவே இந்த நெல்லிக்கணி உடலுக்கு உரம் தரும், பசியைத் தூண்டும், சிறுநீரைப் பெருக்கும். வைட்டமின் ‘சி’ குறைவினால் ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
சாத்துக்குடி
சாத்துக்குடியில் வைட்டமின் ‘சி’ 45 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் ‘சி’ குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
Siragu fruits2எலுமிச்சை
எலுமிச்சையில் கால்சியம் 70 மில்லிகிராம், வைட்டமின் ‘சி’ 39 மில்லிகிராம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின் ‘பி’ சிறிதளவும் உள்ளன. அசீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும், கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
கறுப்பு திராட்சை
கறுப்பு திராட்சையில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
பச்சை திராட்சை
பச்சை திராட்சையில் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. அதோடு நார்ச்சத்து 2.9 கிராம் உள்ளது. இப்பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும், நாக்கு வறட்சி நீங்கும்.
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து 7.3 மில்லிகிராம், கால்சியம் 120 மில்லிகிராம், பாஸ்பரஸ் 50 மில்லிகிராம் மற்றும் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ சிறிதளவு உள்ளன. ரத்தக்சோகையைப் போக்கும்.
சப்போட்டா
சப்போட்டாவில் மாவுச்சத்து, 21.4 கிராம், இரும்புச்சத்து 2 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் (116 கலோரிகள்) அதிகமாக உள்ளது. தவிர வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் இதில் உள்ளன. வாழைப்பழங்களில் பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கவல்லது, நேந்திரன் பழம் ரத்தசோகையைப் போக்கும், மலைவாழைப்பழம் ரத்த விருத்தி செய்யும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும், பற்களின் உறுதித் தன்மைக்கும் இப்பழம் உதவும்.
தர்பூசணி
தர்பூசணியில் இரும்புச்சத்து 7.9 கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. நீர்ச்சுருக்கைப் போக்கும், கோடையில் தாகத்தை தணிக்கும்.
புளி
புளியில் இரும்பு 17 மில்லிகிராம், கால்சியம் 170 மில்லிகிராம், பாஸ்பரஸ் 110 மில்லிகிராம் மற்றும் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச்சத்து குறைவினால் ரத்தசோகை ஏற்படும்.
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் 340 மில்லிகிராம், நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ -யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச்சிக்கல் ஏற்படும், பொட்டாசியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும். மேற்கண்ட நோய்கலைத் தீர்க்கும் இப்பழம்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. நார்ச்சத்து 0.5 கிராம், கால்சியம் 20 மில்லிகிராம், மாவுப்பொருள் 10.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் பாஸ்பரஸ் 70 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ சிறிதளவும் உள்ளது. கால்சியம் உடலில் சேர்வதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது. ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.

ஸ்கேன் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வா் அம்மா அவா்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம், சென்னை.


                பொருள்:  நீலகிரி மாவட்டம், கூடலூா் பந்தலூா்  பகுதிகளில்  அரசு மருத்துவமனைகளில்
     ஸ்கேன் எடுக்க இயலாமல் மக்கள் அவதி  /  ஸ்கேன் பயிற்சி பெற்ற
     மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

மான்புமிகு தமிழக முதல்வா் அம்மா அவர்களுக்கு  பணிவான  வணக்கங்கள்,  

நீலகிரி மாவட்டம் கூடலூா் பந்தலூா் தாலுக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனா்.   இப்பகுதியில் பெரும்பாலும் தோட்ட தொழிலாளா்கள் மற்றும் சிறு குறு விவசாயிகள், அன்றாட கூலி வேலை செய்பவா்கள் ஆதிவாசிகள் என ஏழை எளிய மக்களே அதிகம் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில்  இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ உதவி பெற கூடலூா், பந்தலூா் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெலாக்கோட்டை வட்டார சமுதாய சுகாதார நிலையம், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கப்பாலா, ஓவேலி, ஸ்ரீமதுரை,  உப்பட்டி, மசினகுடி உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், தேவாலா கூடலூா் நகர சுகாதார மையங்களும், கூடலூா் மருந்தகமும் அரசு மூலம் செயல்படுத்தி வருகின்றது.
இங்கு போதிய மருத்துவா்கள் இல்லாத சூழ்நிலையிலும் இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளையே அதிகம் நம்பி வருகின்றனா்.  இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பினி பெண்கள் குழந்தையின் தன்மை குறித்து அறிந்து கொண்டு சிகிச்சை பெற ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டது.  அதன் பின்னா் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம் மற்றும் கூடலூா், பந்தலூா் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. 
ஆனால் தற்போது ஸ்கேன் எடுக்கும் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் இடமாற்றம் பெற்று சென்று விட்டதால்  பந்தலூா் அரசு மருத்துவமனை மற்றும் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையங்களில் ஸ்கேன் எடுக்க பயிற்சி பெற்ற மருத்துவா்கள் இல்லாமல் ஸ்கேன் எடுப்பதில்லை. 
இதனால் இப்பகுதியில் உள்ள கா்ப்பினி பெண்கள் பலா் கூடலூரில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டா்களில் ஸ்கேன் எடுக்க கட்டாய படுத்தபடுவதாக புகார்கள் வருகின்றனா்.  தற்போது தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை ஸ்கேன் எடுக்க 500 முதல் 750 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே ஏழை எளிய மக்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் இப்பகுதியில் ஸ்கேன் எடுக்க பயிற்சி பெற்ற மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகல்                                                                                                                                                                     
                உயர்திரு ஆணையாளர் அவா்கள் உணவுப்பொருள் வழங்கல்
மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு துறை  சென்னை.
உயர்திரு இயக்குனா் அவா்கள் சுகாதார துறை சென்னை                                       
உயர்திரு மாவட்ட ஆட்சியா் அவா்கள்         

 இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்   தலைவா் 

மாபெரும் இரத்த தான முகாம்


கூடலூர் பாரதியார் கலை  அறிவியல் கல்லூரி நட்டு நலப்பணி திட்டம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம். உதகை அரசு மருத்துவ மனை தலைமை இரத்த வங்கி. நெலாக்கோட்டை  சமுதாய சுகாதார நிலையம் மாவட்ட எயிட்ஸ் கட்டுப்பட்டு மையம். இந்திய அரசு நேரு யுவ கேந்திரா  ஆகியன இனைந்து கூடலூர் கல்லூரியில் மாபெரும் இரத்த தான முகாமினை நடத்தின.

அப்துல் கலாம்  அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்திய இந்த முகாமிற்க்கு நெலாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் ஆலோசகர் காளிமுத்து தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

உதகை தலைமை மருத்துவ மனை மருத்டுவ அலுவலர் நவாஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கல்லூரி நட்டு நலப்பணி திட்ட மாணவர்களிடம் இரத்தம் சேகரித்தனர். 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினார்கள்.  இவை உதகை கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்

முகாமிற்க்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மகேஸ்வரன். சிவசங்கரன். மேரி சுஜி உள்ளிட்ட அலுவலர்கள் செய்து இருந்தனர்.
முகாமில் கூடலூர் வருவாய் ஆய்வாளர் கணிசுந்தரம். நாடுகானி  கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல். சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள மாணவா்களுக்கு அறிவுரை

பந்தலூா்

பந்தலூா் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும்
கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்
 அப்துல்கலாம் நினைவு  தின  சிறப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு   பரிசளிப்பும்

கடந்த 2015 - 16 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு  பொது தோ்வில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு
வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணன் தலைமை தாங்கினார்.
கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகா் காளிமுத்து,
மகாத்மா காந்தி பொது சேவை மைய ஆலோசகா் செந்தாமரை,
பள்ளி உதவித்தலைமை ஆசிரியா் ஷமிர் உசேன்,
பள்ளி குடிமக்கள் நுகா்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி,
பெற்றோர் ஆசிரியா் கழக தலைவா் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

தேவாலா அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியா் சமுத்திரபாண்டியன் பேசும்போது

அப்துல் கலாம் அவா்களின் கனவு போல மாணவா்கள் உயா்ந்த லட்சியத்தினை உறுதிப்படுத்தி, அந்த லட்சியத்தை நோக்கி  சரியான வழியில் நமது அடிகளை எடுத்து வைக்கவேண்டும்.

 மாணவா்கள் விடா முயற்சியுடன் குறிக்கோளை நோக்கி போராடினால் வெற்றி பெற முடியும்.  
கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் நாம் சாதிக்க முடியும்,
தோல்விகளளை கண்டு துவண்டு விட கூடாது என்றார்.

கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய தலைவா் சிவசுப்பிரமணியம் பேசும் போது
மாணவா்கள் பள்ளி படிப்போடு மட்டும் இல்லாமல் பொது அறிவை மேம்படுத்தும் விதமாக தினசரி செய்தி தாள்கள் மற்றும்
புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக கொண்டால் இன்றைய போட்டி நிறைந்த நிலையில் 
பொது தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றார்.

தொடா்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும்
கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் சாதிக், சலிம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளி வரலாற்று ஆசிரியா் சிவகிருஷ்ணன் வரவேற்றார்

முடிவில் பள்ளி உதவித்தலைமை ஆசிரியா் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.