https://www.youtube.com/watch?v=zTQlswG85dM |
https://www.youtube.com/watch?v=zTQlswG85dM |
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைப்பெற்றது
நிகழ்ச்சிக்கு பள்ளி
தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பள்ளி
தாளாளர் சகோதரி எட்வின் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
https://www.youtube.com/watch?v=zTQlswG85dM
அப்துல் கலாமின் சிறப்புகள் மாணவா்களின் பங்களிப்பு ஆகியன குறித்து தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசினார்.
தொடர்ந்து பள்ளியில் நடைப்பெற்ற
கட்டுரை போட்டியில் 6/8ம் வகுப்பு பிரிவில் முதல் இடம் நிவ்யா இரண்டாம் இடம் தமிழ்ச்செல்வி
மூன்றாம் இடம் வினித்தா
9/10ம் வகுப்பு பிரிவில் முதல் இடம் ரம்யா இரண்டாம் இடம் யுவராணி
மூன்றாம் இடம் கோகிலா பிடித்த மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், செந்தாமரை
தனிஸ்லாஸ் உட்பட மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக மாணவி சிவகாமி வரவேற்றார்.
முடிவில் நுகர்வோர் மன்ற ஆசிரியர் மார்ட்டின் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக