லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

CCHEP GANTHI JEYANTHI 2.10.2015 காந்தி பிறந்த நாள்









பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் இந்திய அரசு நேரு யுவகேந்திரா ஆகியவற்றின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்ஆலோசகர் காளிமுத்து சித்தா மருத்துவர் கனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இணிப்புகள் வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தியின் வரலாறுகள் குறித்து நினைவ கூரப்பட்டது.  நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன்துணை செயலாளர் சுரேஷ்மற்றும் நிர்வாகிகள் தணிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. 3 மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது)


https://www.facebook.com/profile.php?id



(அடோபர் 2 அண்ணல் காந்தி பிறந்த நாள் )

மகாத்மா காந்தி பிறந்த நாள்
பந்தலூர் 3 பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் இந்திய அரசு நேரு யுவகேந்திரா ஆகியவற்றின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து சித்தா மருத்துவர் கனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இணிப்புகள் வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் வரலாறுகள் குறித்து நினைவ கூரப்பட்டது. நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பொது சேவை மைய செயலாளர் சந்திரன், துணை செயலாளர் சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் தணிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது)

சாந்தமூர்த்தி வழிநடப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

வெள்ளையனை விரட்டியண்ணல்
---விடுதலையை நமக்களிக்கக்
கொள்ளையரின் கரங்களிலே
---கொடுத்தவர்க்கே அடிமையானோம் !

அன்புவழி காட்டியண்ணல்
---அன்னியனை விரட்டிவிட
வன்முறையில் சந்ததியை
---வளமாக வளர்க்கின்றோம் !

மெய்மையொளி ஏற்றியண்ணல்
---மேதனிக்கு வழிகாட்டப்
பொய்மையிருள் பூசிநாமோ
---புன்மைகுழி வெட்டுகின்றோம் !

தீண்டாமை போக்கவண்ணல்
---குண்டிற்குப் பலியாக
வேண்டாத சாதிகளை
---வேலியிட்டே காக்கின்றோம் !

தூய்மையாட்சி வேண்டியண்ணல்
---தியாகத்தில் வாழ்வளிக்க
நாயாட்சி ஊழலிலே
---நாளும்நாம் நடத்துகின்றோம் !

காந்தியினை மறந்ததாலே
---கலவரமே நாடாச்சு
சாந்திநலம் நாம்பெறவே
---சாந்தமூர்த்தி வழிநடப்போம் !






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 






 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக