உப்பட்டியில் இரத்த தான முகாம்
பந்தலூர். அக், 6: பந்தலூர் அருகே உப்பட்டியில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு துறை மாவட்ட துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படி நெலாக்கோட்டை வட்டார மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமையம், எஸ். ஓய். எஸ், எஸ். எஸ். எப் அமைப்பு உப்பட்டி கிளை ஆகியன இணைந்து உப்பட்டி எஸ் ஓய் எஸ் அலுவலகத்தில் இரத்த தான முகாமினை நடத்தின. முகாமிற்கு எஸ் ஓய் எஸ் உப்பட்டி கிளை செயலாளர் ஐமுட்டி தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர்த்தி, உப்பட்டி மஜித் ஆஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் இரத்த தான முகாமினை துவக்கி வைத்தார். கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுரேஸ் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தானமாக வழங்கப் பட்ட இரத்ததினை சேகரித்தனர். தொடர்ந்து முகாமில் இரத்த வகை பரிசோதனையும் செய்யப் பட்டது. இரத்த கொடையாளர்கள் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டது. முகாமில் 30 க்கும் மேற்ப்பட்டோர் இரத்த தானம் செய்தனர். 50-க்கும் மேற்பட்டோர் இரத்த கொடையாளர்களான பதிவு செய்து கொண்டனர், அவசர தேவைக்கு இரத்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக உப்பட்டி எஸ் ஒய் எஸ் நிர்வாகி ஷெபீர் வரவேற்றார் , முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமைய பந்தலூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக