லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

திங்கள், 5 அக்டோபர், 2015

CCHEP BLOOD DONATION CAMP UPPATTY 5.10.15 உப்பட்டியில் இரத்த தான முகாம்







உப்பட்டியில் இரத்த தான முகாம்





பந்தலூர். அக், 6: ந்தலூர் அருகே உப்பட்டியில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது.  ​பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு துறை மாவட்ட துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படிநெலாக்கோட்டை வட்டார மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமையம்எஸ். ஓய். எஸ், எஸ். எஸ். எப் அமைப்பு  உப்பட்டி கிளை  ஆகியன இணைந்து உப்பட்டி  எஸ் ஓய் எஸ் அலுவலகத்தில் இரத்த தான முகாமினை நடத்தின. முகாமிற்கு  எஸ் ஓய் எஸ் உப்பட்டி கிளைசெயலாளர் ஐமுட்டி தலைமை தாங்கினார்கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமைய தலைவர் சிவசுப்பிரமணியம், உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர்த்தி, உப்பட்டி மஜித் ஆஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் இரத்த தான முகாமினை துவக்கிவைத்தார்கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுரேஸ் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தானமாக வழங்கப் பட்ட இரத்ததினைசேகரித்தனர்.  ​தொடர்ந்து முகாமில் இரத்த வகை பரிசோதனையும் செய்யப் பட்டதுஇரத்தகொடையாளர்கள் பட்டியலில்பெயர் பதிவுசெய்யப்பட்டது. முகாமில் 30 க்கும்மேற்ப்பட்டோர் இரத்த தானம்செய்தனர்.  50-க்கும்மேற்பட்டோர் இரத்தகொடையாளர்களான பதிவுசெய்துகொண்டனர்அவசரதேவைக்கு இரத்தம் வழங்க முடிவுசெய்யப்பட்டது. முன்னதாக உப்பட்டி எஸ் ஒய் எஸ் நிர்வாகி ​​ஷெபீர் வரவேற்றார்முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமைய பந்தலூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் நன்றி கூறினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக